2025 மே 19, திங்கட்கிழமை

மைத்திரிக்கு சேறுபூசிய, பிரதேச அரசியல்வாதிக்கு பிணை

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் போது, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை, பெண்ணொருவருடன் தொடர்புபடுத்தி தன்னுடைய முகப்புத்தகத்தின் ஊடாக சேறுபூசிய, தென் மாகாண சபையின் உப தலைவர் சம்பத் அத்துகோரள பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சமூகவலைத்தளத்தளத்தில், ஜனாதிபதி பற்றிய அவதூரான புகைப்படங்களை பதிவேற்றம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில்,  மாகாணசபையின் பிரதித் தலைவர், குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தவில் போது, பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில், முகநூலில் அவதூரான புகைப்படங்களை பதிவேற்றம் செய்தார் என்று, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X