2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முன்னாள் ஐ.ஜி.பிக்கு அழைப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொலிஸ்மா அதிபரும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இலங்கைத் தூதுவருமான மஹிந்த பாலசூரிய, பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

ஆணைக்குழு முன்னிலையில், இன்று திங்கட்கிழமை (10) ஆஜராகுமாறே அழைக்கப்பட்டுள்ளார்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நால்வருக்கு, சட்டவிரோதமான முறையில் பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு அனுமதியளித்தார் என்ற   குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர், விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். 

இந்தச் சட்டவிரோதமான நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்துக்கு 3 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அவைத் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கே, அவர் அழைக்கப்பட்டுள்ளார்.  

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களான மொஹமட் முஸ்ஸமில், சிசிர குமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வருக்கு 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் ஆயுதத்துடன் கூடிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .