Kanagaraj / 2016 ஜனவரி 18 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவை பல்கலைக்கழக தகவல் தொழிற்நுட்ப பீடத்தைச்சேர்ந்த மாணவர்கள் முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணம், திகதி குறிக்கப்படாமல் அப்பீடம் மூடப்பட்டுவிட்டதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மொரட்டுவை பல்கலைக்கழக தகவல் தொழிற்நுட்ப பீடத்தைச்சேர்ந்த மாணவர்கள் 11 பேர், வகுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகவும் அவர்கள் மீதான தடையை நீக்குமாறு கோரியும் அப்பீடத்தைச் சேர்ந்த சுமார் 2,000 மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, மொரட்டுவைப் பல்கலைக்கழகம் மூடப்படவில்லை என்றும் தகவல் தொழிற்நுட்ப பீடம் மட்டுமே மூடப்பட்டதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 minute ago
16 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
18 minute ago