2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

முறைப்பாடு கிடைக்கவில்லை:ஜயநாத் ஜயவீர

Thipaan   / 2016 ஏப்ரல் 25 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் உள்ள பரவிபாஞ்சான் கஜபா படைப்பிரிவின் இராணுவ தலைமையகத்துக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்;க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பலவந்தமாக நுழைந்தனர் என்பது தொடர்பில் இதுவரையில் முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

இது தொடர்பில், கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் கருணாசேகரவினால், வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பென்க்ளின் பெர்ணான்டோவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அது முறைப்பாடல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.  இராணுவப் படைத் தலைமையகத்துக்குள் நுழையும்போது முன்னறிவித்தல் விடவேண்டும் என்பது தொடர்பிலான முறைமையைத் தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நபராவது, இராணுவ முகாமுக்குள் உள்நுழைவதாயின் அதுதொடர்பில் முன்னறிவித்தல் விடுக்கப்படுமாயின் அந்நபரை வரவேற்றல் மற்றும் அவருக்கான கௌரவம் முறையாக வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X