2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மா விலையில் மாற்றமில்லை

Thipaan   / 2016 ஜனவரி 06 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோதுமை மாவின் விலையில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று, நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

 ஒரு கிலோ கிராம் கோதுமை மாவுக்கு, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த சில்லறை விலை, 87 ரூபாயாகும்.

நிர்ணயிக்கப்பட்ட அந்த விலையை மீறிக் கூடுதலான விலைக்கு விற்கின்ற வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வதிகாரசபை அறிவித்துள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை, நிறுவனமொன்று 2 ரூபாயினால் அதிகரித்துள்ளதாகத் தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என்றும் அவ்வதிகார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடத்துக்கான வரவு- செலவுத்திட்டத்தில், தேசியத்தை கட்டியெழுப்பும் வரி அதிகரிகப்பட்டமையால் ஒரு கிலோ கிராம் மாவின் விலையை 2 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X