2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Freelancer   / 2025 மே 25 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல - திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சிறுவன் தனது தந்தையுடன் அதிகாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென வீதிக்கு வந்த யானை  சைக்கிளைத் தாக்கியுள்ளதுடன் இதன்போது தந்தை சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும்  சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிறுவனை யானை மிதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X