2026 ஜனவரி 31, சனிக்கிழமை

யுவதி வன்புணர்வு: சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

Editorial   / 2026 ஜனவரி 31 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் யுவதி ஒருவரை பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஒருவரை 3ம் திகதி வரை விளக்கமறியல் (கனகராசா சரவணன் ) காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (30) உத்தரவிட்டார். இதுபற்றி தெரியவருவதாவது குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்தவரான சட்டத்தரணியாக செயல்பட்டு வரும் சட்டத்தரணி ஒருவர் தனது பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 4 பெண் பிள்ளைகளை கொண்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரியான 24 வயதுடைய யுவதி ஒருவரை 2023 தொடக்கம் வேலைக்கு அமர்த்தியுள்ளார் இவ்வாறு வேலைக்கு அமர்த்திய யுவதி காலையில் இருந்து இரவு 8.30 மணிவரையும் கடந்த 2025 வரை இரண்டு வருடங்களாக கடமையாற்றி வந்துள்ளதுடன் அவருக்கு சம்பளமாக ஒரு வாரத்துக்கு 3 ஆயிரம் ரூபா வீதம் வாராவாரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் குறித்த யுவதி தனிமையில் இருக்கும் போது சட்டத்தரணி அவர் மீது அடிக்கடி பாலியல் சேட்டைகள் செய்து வந்துள்ள நிலையில் கடந்த வருடம் 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டபோது அவர் அதற்கு இடம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த வருடம் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் காரியாலயத்தில் தனிமையில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுவதிக்கு குறித்த சட்டத்தரணி அவருக்கு மதிய உணவு பார்சல் ஒன்றை வழங்கி அவரை சாப்பிடுமாறு தெரிவித்ததையடுத்து அவர் அதனை வாங்கி உட்கொண்ட சில நிமிடங்களில் பின்னர் அவருக்கு மயக்க நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சட்டத்தரணி காரியாலயத்தில் இருக்கும் ஓர் அறையின் கட்டிலில் தூக்கி சென்று படுக்க வைத்துள்ளார். இதன் பின்னர் மயக்க நிலையில் கிடந்த யுவதியை மறுபக்கம் நிமிர்த்தி யுவதியின் விருப்பம் இல்லாமல் அவளை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்து கொண்டுள்ளார். அதன் பிற்பாடு குறித்த யுவதிக்கு வாராவாரம் வழங்கும் 3 ஆயிரம் ரூபா சம்பளத்தை 4 ஆயிரம் ரூபாக அதிகரித்து வழங்கி வந்துள்ள நிலையில் குறித்த யுவதி தனக்கு நேர்ந்த வன்கொடுமை தொடர்பாக தனது குடும்பம் உட்பட எவருக்கு தெரிவிக்காமல் அங்கு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இவ்வாறான நிலையில் குறித்த யுவதி வேலைக்கு செல்லாமல் நின்றதை அடுத்து யுவதியின் குடும்பம் பொருளாதாரம் இன்றி தத்தளித்து கொண்டதைடுத்து யுவதியின் சகோதரி குறித்த சட்டத்தரணியின் காரியாலயத்துக்கு வேலைக்கு சேர்ந்து அங்கு கடமையாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட யுவதிக்கு குறித்த சட்டத்தரணி நபர் ஒருவரை திருமணம் பேசி; கடந்த வருடம் 2025ம் டிசம்பர் மாதம் 28 ம் திகதி திருமணம் முடித்து வைத்ததையடுத்து திருமணம் முடித்து ஒரு வாரத்தின் பின்னர் குறித்த யுவதி வாந்தி எடுத்து மயக்கமடைந்ததையடுத்து அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த போது அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் 12 வாரங்கள் கொண்ட மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து திருமணத்துக்கு முன்னர்; கர்ப்மாகியுள்ளதை அறிந்த யுவதியை திருமணம் முடித்த கணவன் யுவதியுடன் முரன்பட்டுக் கொண்டு அவரை விட்டுவிட்டு வெளியேறிய நிலையில் யுவதி மீது பாலியல் பலாத்காரம் இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர்கள் பெண்கள் அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்ததை அடுத்து யுவதியை பிரதே செயலக சேவை நடும் மகளீர் பிரிவினர் அவரை பாதுகாப்பான இல்லத்தில் கொண்டு சென்று தங்க வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர் பெண்கள் அமைச்சு பொலிசாருக்கு அறிவித்துள்ளதையடுத்து குறித்த யுவதியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிசார் பாதுகாப்பு இல்லத்திற்கு சென்ற போது சேவை நடும் மகளீர் பிரிவினர் யுவதியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அனுதி வழங்காதது இழுத்தடித்து வந்துள்ள நிலையில் கடந்த புதன்கிழமை (28) யுவதியிடம் பொலிசார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி க்கு எதிராக பலாத்கார கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்குதல் ஒன்றை செய்ததையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு அடுத்த வழக்கு எதிர்வரும் 26ம் திகதி இடப்பட்டு கட்டளை பிறப்பித்தது உத்தரவிட்டார். இந்த நிலையில் குறித்த சட்டத்தரணியை நேற்று வெள்ளிக்கிழமை (30) பொலிசார் கைது செய்து அவரை அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிராளி சார்பில் சட்டத்தரணி ,எம்.ஐ.இயாஸ்டீன் தலைமையில் ஜெகன் உட்பட்ட 4 சட்டத்தரணிகளும் வழக்காளி சார்பில் சட்டத்தரணி றிஸ்வி தலைமையிலான சட்டத்தரணிகளான யோகேஸ்வரன், கமலதாசன், வேணுதாசன், நஜீபா, ரம்சீயா ஆகியோர் ஆஜராகி விண்ணப்பங்களை முன்வைத்து நிலையில் இரவு 7.30 மணி வரை வழக்கு விசாரணை இடம்பெற்ற நிலையில் நீதவான் அவரை எதிர்வரும் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதேவேளை குற்றம் சாட்டப்பட்ட ஏதிராளியான சட்டத்தரணி சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி எம்.ஐ.இயாஸ்டீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவே இலங்கை சட்டத்தின்படி விரும்பினால் எந்தவிதமான குற்றமும் கிடையாது ஆனால் குறித்த முறைப்பாட்டாளர் தண்டனைச் சட்டக் கோவை பிரகாரம் கற்பழிப்பு என ஒரு குற்றத்தை பதிவு செய்துள்ளார் ஆகவே எங்களது விண்ணப்பம் 18 வயதுக்கு மேற்பட்ட சம்பவம் அதற்கான ஆதாரம் காட்டினோம் அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது ஆகவே சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற அடிப்படையில் நீதிமன்றம் ஒரு பூரணமான நியாயமான விசாரணைகளை இருபக்கமும் முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவரை 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளது. உண்மையில் சட்டப்படி 16 வயதுக்கு உட்பட்ட பிள்ளையாக இருக்குமாயின் கட்டாய விளக்கமறியலில் கட்டாய சிறை தண்டனை அவசியம் ஆனால் 16 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் 3 மாதம் கழித்து செய்த முறைப்பாடு என்பதினால் மேலதிக விசாரணைகள் கட்டாயம் தேவை என்ற அடிப்படையில் நீதிமன்றம் விளக்கமறியல் வைத்துள்ளது யாராக இருந்தாலும் ஒரு நியாயமான நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X