Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 01 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
யால தேசிய பூங்கா, இன்று முதல் இரண்டு மாத காலத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்று, வன ஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில், தற்போது நிலவிவரும் வரட்சியான வானிலை காரணமாகவும் வன ஜீவராசிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், ஒவ்வொரு வருடமும், செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில், இந்தப் பூங்கா மூடப்படுவது வழக்கமாகும்.
இதற்கமைவாக, பூங்காவின் இலக்கம் ஒன்று வலயம் அல்லது பலட்டுபான நுழைவாயில், இந்த மாத காலப்பகுதியில் மூடப்படும் என்றும் இக்காலப்பகுதியில், இந்த வலய பூங்காவுக்கான வீதிக் கட்டமைப்பும், ஓய்வு விடுதியும் புனரமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் யால தேசிய பூங்காவைப் பார்வையிடுவதற்காக 6 இலட்த்துக்கும் மேற்பட்டோர் வருகை தருவதாக தெரிவித்துள்ள அவர், இவர்களுள் 45 சதவீதமானோர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய பூங்காவின் மூலம், வருடாந்தம் 900 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெறுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago