Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஜூலை 17 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் ஆங்கில வகுப்பு நடத்தும் வீடொன்றில், யுவதி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (16) அன்று முறைப்பாடு கிடைத்துள்ளது .
வவுனியா திருவனாவ் குளம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் தங்கி இருந்த விடுதி ஒன்றில் குறித்த விரிவுரையாளர் ஆங்கில வகுப்பு ஒன்றை நடத்தி வந்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (16) அன்று வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, அரச ஊழியரான பாதிக்கப்பட்ட யுவதி குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்,
அப்போது விரிவுரையாளர் வகுப்பை நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு சென்று குளியலறையின் ஜன்னல் வழியாக யுவதி குளிப்பதை தன் கையடக்கத் தொலைபேசியூடாக வீடியோ எடுத்துள்ளார்.
குளித்துக்கொண்டிருந்த யுவதி , குளியலறையின் ஜன்னலிலிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று தெரிவதை கண்டு பயந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார் .
பின்னர் ஆங்கில விரிவுரையாளர் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் , இதுகுறித்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, விரிவுரையாளர் குளியலறை அருகே நின்று வீடியோ பதிவு செய்வதை அதில் காணொளியாக பதிவாகியுள்ளது .
மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து குறித்த யுவதிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago
9 hours ago
03 Jul 2025