2025 மே 19, திங்கட்கிழமை

ரக்ன லங்கா: காமினி ஜயசுந்தர நீக்கம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட விசாரணையில், தவறான ஆதாரங்களை வழங்கியதன் காரணமாக ரக்ன லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர, அவரது பொறுப்பில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.

பொது முகாமையாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜயசுந்தர நீக்கப்பட்டுள்ளதாக, மேற்படி நிறுவனத்தின் தலைவரான விக்டர் சமரவீர தெரிவித்துள்ளார். இவ்விடயம், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரக்ன லங்கா நிறுவனத்தை காமினி ஜயசுந்தர இழிவுபடுத்தியுள்ளதாகவும், கடினமானதொரு நிலைக்கு நிறுவனத்தை இட்டுச் சென்றமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

ஜயசுந்தர, விசாரணைகளின்போது பொய்யான ஆதாரத்தை அளித்ததாக  நிரூபணமானதையடுத்து, அவர் மீது ஏன் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படமுடியாது என விளக்கம் கோரப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லசிலி டீ சில்வா தெரிவித்துள்ளார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X