Nirosh / 2021 நவம்பர் 17 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையில்லை என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜபக்ஷக்களின் குடும்பமே நாட்டுக்கு சுமை என்றும் தெரிவித்தார்.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் பசில் ராஜபக்ஷ அமைச்சராக இருந்த முன்னாள் அரசாங்கத்திலேயே 87 சதவிதமான அரச ஊழியர்கள் சேவைக்கு இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
உண்மையில் நாட்டுக்கு ராஜபக்ஷக்களின் குடும்பமே சுமையாக உள்ளது. நாடு வங்குரோத்து நிலைக்கு செல்வதை தடுப்பதற்கான எந்தவொரு திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை. இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு எமக்கும் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

47 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
3 hours ago