2025 மே 01, வியாழக்கிழமை

ரணிலின் கருத்துக்கு ஷவேந்திர சாட்டையடி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, கொவிட் 19 ஐத் தடுப்பதற்கான ஜனாதிபதி செயலணி விமர்சித்த போதிலும், அவர் நாரஹேன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில்  கொவிட் தடுப்பூசியை பெற்றுள்ளார் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகையில் இடம்பற்ற பூஜையின் பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த போதே இராணுவத் தளபதி மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

ஆயுதப்படைகள், குறிப்பாக இராணுவம் மூலம் தடுப்பூசி வழங்கப்பட்டதில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், தனியொரு நபர் மட்டுமே செய்யும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அதற்குப் பதிலளிப்பது இராணுவத் தளபதியாக தனது கடமை என்றும் தெரிவித்தார்.  

ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதியே தலைமை தாங்குகிறார் என்றும் குழுவில், சுகாதார அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களும் அடங்குகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆயுதப்படைகள் செய்யும் சேவையை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொவிட் 19 ஐத் தடுப்பதற்கான ஜனாதிபதி செயலணி தோல்வயடைந்துள்ளது என்றும் அது கலைக்கப்பட்டு, தொற்றுநோய் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு, அனர்த்த முகாமைத்துவ சபை மற்றும் அமைச்சரவை போன்ற அரசியலமைப்பு உத்தரவாத அதிகாரத்தை அனுபவிக்கும் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .