2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரணிலுக்கு ஆபத்து; பாதுகாப்பை பொலிஸார் பொறுப்பேற்க வேண்டும்

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ள​து தவறு எனவும், ரணிலுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கான பாதுகாப்பை பொலிஸார் பொறுப்பேற்க வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தமது அரசாங்கத்திலும் எதிர்க் கட்சித் தலைவராக தொடர்வார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, இனி நாட்டு ம​க்கள் எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை. தமது அரசாங்கத்தில் எரிபொருள்
வி​சூத்திரம் இல்லாது செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து​ கருத்துரைத்த அவர், 54 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த எங்களுக்கு எதிர்க் கட்சி பதவியை வழங்க வேண்டும் என நாம் தொடர்ந்து கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது கோரிக்கை விடுத்துவந்திருந்தோம்.

எனினும் வெறும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே கடந்த நல்லாட்சி அரசாங்கம் எதிர்க் கட்சி அந்தஸ்த்தை வழங்கியிருந்தது. எனவே எமது அரசாங்கத்திலும் எதிர்க் கட்சித் தலைவராக இரா.சம்பந்தனே இருப்பார் எனவும் கூறினார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது தவறு எனத் தெரிவித்த அவர், நான்கு தடவைகள் அவர் இந்நாட்டின் பிரதமராகவும், எதிர்க் கட்சித் தலைவராகவும் பதவி வகித்திருப்பதால், அவரது பாதுகாப்பை பொலிஸார் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .