2025 மே 15, வியாழக்கிழமை

ரத்ன தேரருக்கு ​ஆதரவாக திருகோணமலையில் சத்தியாகிரகப் போராட்டம்

Editorial   / 2019 ஜூன் 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமதுரு அமரஜீவ

உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள, அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலை- சிவன்கோவிலுக்கு முன்பாக 51 வயதான நபர் ஒருவர் சத்தியகிரகப் போராட்டத்தை இன்று (2) ஆரம்பித்துள்ளார்.

திருகோணமலை- திருக்கடலூரைச் சேர்ந்த வில்வராஜா ஜெயவேந்தன் என்ற நப​ரே இவ்வாறு சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலக்குமாறுக் கோரி, இச்சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சத்தியாகிரகப் போராட்டத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .