2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ரயிலில் பாய்ந்து தகப்பனும் மகளும் பலி

Simrith   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மனைவி வேறொரு நபருடன் தகாத உறவைப் பேணுவதையறிந்து , 38 வயதுடைய கணவன் தனது 6 வயது மகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு நோக்கி சென்ற  ரயிலுக்கு முன் குறித்த நபர் பாய்ந்த சம்பவமானது நேற்றிரவு ராஜ எல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு அண்மையில் நாடு திரும்பியதாகவும் அங்கு வேறொரு நபருடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இருவரும் கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X