2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரயில் பயணக் கட்டணங்கள், 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன என, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், குறைந்தபட்சக் கட்டணமாக, 10 ரூபாயே தொடர்ந்தும் காணப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான ஆரம்ப அறிவிப்பு, கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதெனச் சுட்டிக்காட்டும் ரயில்வே திணைக்களத் தகவல்கள், இறுதியாக ரயில் கட்டண அதிகரிப்பு, 2008ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கின்றன. 

இதன்படி, மூன்றாம் வகுப்புக்கான குறைந்தபட்சக் கட்டணமான 10 ரூபாய், இரண்டாம் வகுப்புக்கான 20 ரூபாய், முதலாம் வகுப்புக்கான 40 ரூபாய் ஆகியன, மாற்றமடையாது. ஆனால், குறைந்தபட்சக் கட்டணத்துடன் பயணம் செய்யக்கூடிய தூரம், 9 கிலோமீற்றரில் இருந்து, 7 கிலோமீற்றராகக் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கட்டண மாற்றத்தின் காரணமாக, ரயில் பருவகாலச் சீட்டுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X