2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ரயில் சேவைகளின் வருமானம் வீழ்ச்சி

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றால் ரயில் சேவைகளின் அன்றாட இலாபம் 5 மில்லியனாக குறைவடைந்துள்ளதென, ரயில் முகாமையாளர் டிலந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
​கொரோனாவுக்கு முன்னர் ரயில் சேவைகள் தினமும் 17- 18 மில்லியன் வருமானத்தை பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சாதாரணமாக, அலுவலக ரயில்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படவில்லை என்றும் தூர ரயில் சேவைகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையே குறைவடைந்துள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் அதிக வருமானத்தை ஈட்டித் தந்த பதுளை இரவு தபால் ரயில், காங்கேசன்துறை, பொலன்னறுவை, பெலியத்த, யாழ்ப்பாணம் ஆகிய தூர இடங்களுக்கானரயில் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சில தூர இடங்களுக்கான ரயில் சேவைகளில் வார இறுதியில் 70 பயணிகளே பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .