Freelancer / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 22 கம்பனிகள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கி வருகின்றன என்று தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ஆறு கம்பனிகள் தான் இழுத்தடிப்பு செய்கின்றன என்றும் இப்பிரச்சினைக்கு விரைவில் உரிய பொறிமுறை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தலவாக்கலையில் இன்று (23) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தானும், பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தமிழகம் சென்றிருந்தோம் போது தமிழக முதல்வரை சந்தித்து பல விடயங்களை தொடர்பில் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக மலையக மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் 100 புலமைப்பரிசில்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம் என்றார்.
அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற தமிழர் மாநாட்டுக்கு இந்திய வம்சாவளி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் 10 எம்.பிக்கள் மற்றும் முன்னாள் எம்.பிக்களும் இருக்கின்றனர் என்பது தொடர்பிலும் பேசியதாகவும் மீனவர் பிரச்சினை சம்பந்தமாக செந்தில் தொண்டமான் கருத்துகளை முன்வைத்திருந்தார் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, எமது மக்களுக்கு நாம் எதை செய்தாலும் சிலர் இன்று விமர்சிக்கின்றனர். கோதுமை மா நிவாரணம் வேண்டும் என்றனர். அதை பெற்றுக்கொடுத்தோம். தற்போது அதற்கும் விமர்சனம். காங்கிரஸை நோக்கி ஒரு விரல் நீட்டும்போது எஞ்சிய நான்கு விரல்களும் அவர்கள் பக்கம்தான் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது என்று சுட்டிக்காட்டினார்.
நாம் மக்களுக்கு சேவையாற்றவே வந்தோம். எனவே, முடியுமானால் ஒத்துழைப்பு வழங்குங்கள். இல்லையேல் ஒதுங்கி நில்லுங்கள். நல்லாட்சியின்போது தேயிலை சபை ஊடாக 50 ரூபாயைக்கூட வாங்கிக்கொடுக்க முடியாதவர்கள் இன்று எமது முயற்சியை சாடுகின்றனர் என்றார்.
4 minute ago
13 minute ago
19 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
19 minute ago
25 minute ago