2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ரூ. 14 கோடி பெறுமதியான கச்சைகளை திருடியவன் கச்சிதமாக சிக்கினான்

Gavitha   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 கோடி ரூபாய் பெறுமதியான மகளிர் உள்ளாடைகளைத் திருடினார் என்ற குற்றச்சாட்டில், அநுராதபுரம், ஹிதோகம, குடா நெலும பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்தே இந்த உள்ளாடைகள் திருடப்பட்டுள்ளன.

இருப்பினும் சந்தேகநபர், நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளிருக்கான கீழாடைகள் மற்றும் 34 ஆயிரம் மார்புக்கச்சைகள் ஆகியன, கடந்த 6ஆம் திகதி இரவு, தொழிற்சாலை உடைக்கப்பட்டுத் திருடப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், கைதான பிரதான சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X