Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஏப்ரல் 05 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக, நேற்று செவ்வாய்க்கிழமை(05) மாறியது. அதன் பின்னர், அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது.
அதன் பின்னர் உப தலைவர்கள் எழுவர் நியமிக்கப்பட்டனர். பேரவையின் வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் 21 பேரடங்கிய வழிநடத்தல் குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
இவ்விரு குழுக்களிலும் முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகரும் எம்.பியுமான சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உள்ளடக்கப்படவில்லை.
இதேவேளை, இவ்விரு குழுக்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை.
அந்த முன்னணியில் ஐந்து எம்.பிக்கள் உள்ளனர். அவர்களைவரும் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .