Freelancer / 2026 ஏப்ரல் 17 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD லயன் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் மூன்று வீடுகள் மற்றும் உடமைகள் முற்றாக எரிந்து சாம்பல் ஆகி உள்ளன.
குறித்த பகுதியில் நேற்று மாலை 7.30 மணி அளவில் திடீரென தீ பரவல் ஏற்பட்டதால் மூன்று வீடுகளின் உடமைகள் முற்றாக சேதம் அடைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதேநேரம் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை நுவரெலியா பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். (a)

23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago