Freelancer / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் எரிவாயு நெருக்கடி ஏற்படாது என்றும் நாட்டுக்கு எரிவாயுவை வழங்கும் திறன் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்த லிட்ரோ காஸ் தலைவர் தெஷார ஜயசிங்க, அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன என்றும் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மாதத்துக்குத் தேவையான எரிவாயு இருப்புகளை இறக்குமதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய அறிக்கைகள் பொறுப்புடன் செய்யப்படுகின்றன.
கடந்த பத்து நாட்களில் மட்டும், நாட்டில் உள்ள நுகர்வோருக்கு 95,000க்கும் அதிகமான உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்கியுள்ளோம்.
இது அதிகம். ஏனெனில் இலங்கையில் நாளாந்த உள்நாட்டு எரிவாயு தேவை 90,000 முதல் 95,000 சிலிண்டர்களாகக் காணப்படுகிறது.
எரிவாயு நெருக்கடிக்கு முதல் நாள், எங்கள் நிறுவனம் மட்டும் 80,000 எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோருக்கு வழங்கியது என்று அவர் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago