2025 ஜூலை 21, திங்கட்கிழமை

“வகுப்பறையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து அலங்காரம் செய்த டீச்சர்”

Editorial   / 2025 ஜூலை 21 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆரம்பப் பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியை சங்கீதா மிஸ்ரா குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்தின் புலந்த்ஷேர் மாவட்டம் முந்தக்கேடாவில் உள்ள பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 அந்த வீடியோவில், மாணவர்கள் வகுப்பில் இருக்கும்போது ஆசிரியை தனது தலைமுடிக்கு எண்ணெய் தடவியதுடன், கைபேசியில் கிளாசிக்கல் இசையை ஓடவிட்டும் காணப்படுகிறார். இது கல்வித்துறையின் கடுமையான விமர்சனத்தையும், பொதுமக்களின் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாடசாலைக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்களுடன் ஆசிரியை மோசமாக நடந்து கொண்டதுடன், கம்பியால் அடித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி டாக்டர் லஷ்மிகாந்த் பாண்டே, இந்த சம்பவத்தை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிந்து கொண்டு, தனிப்பட்ட விசாரணை அலுவலரை நியமித்து விசாரணையைத் துவக்கியுள்ளார். அதற்குமுன்னர் ஆசிரியை சங்கீதா மிஸ்ரா பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஜூலை 16ஆம் திகதி பாடாசலைக்கு வராத போது, வருகை பதிவேட்டில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எழுதிய குறிப்பை ஆசிரியை அழித்ததாகவும் புகார் எழுந்தது. மேலும், தற்போது அந்த ஆசிரியை புலந்த்ஷேர் மாவட்டம் குர்ஜா வட்டத்தில் உள்ள ஜமால்புர் ஆரம்பப்பாடசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் பள்ளிகளில் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் இருக்கின்றன என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .