Freelancer / 2026 ஜனவரி 21 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மாதாந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை 1,42000 லிருந்து 2,00,000 ஆகவும் அதிகரித்துள்ளதென சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம் பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், சுமார் 1.9 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட நபர்கள் அரசாங்கத்தின் நிவாரணங்களைப் பெற்று வருகின்றனர்.பயனாளிகளில் 4 பிரிவுகள் உள்ளனர்.முதலில் மிகவும் ஏழ்மையான பிரிவினர் அவர்களின் மாதாந்த உதவித்தொகை 15,000 ரூபா விலிருந்து 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.இரண்டாவது குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர். அவர்களின் மாதாந்த உதவித்தொகை 8,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டுள்ள பிரிவினருக்கு மாதாந்தம் 5,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படுகிறது.இடைநிலை பிரிவினருக்கு மாதத்திற்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவர்களுக்கான நிவாரண காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக சமூகத்தில் வாத விவாதங்கள் காணப்படுகின்றன. பயனாளிகளைத் தேர்ந்தெடுக்க சமூக நலன்புரி சபை ஆறு முக்கிய அளவுகோல்களையும் 22 துணை அளவுகோல்களையும் பயன்படுத்துகிறது என்றார்.
23 minute ago
39 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
4 hours ago
4 hours ago