2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வசந்தவை தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி அனுமதி

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்  வசந்த முதலிகே, ஹசாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதியளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி மாணவர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, ​​வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களில் 15 பேர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதன்படி, வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சரின் அனுமதிக்கு உட்பட்டு, 90 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .