2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வடக்கு கிழக்கு இணைப்புக்கு மஹிந்த எதிர்ப்பு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், ஒன்றாக இணைக்கப்படுவதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னை ஓர் இனவாதியாக நோக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடத்துள்ளார்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியொன்றை உருவாக்குவதற்கு, புதிய சக்தியொன்றைத் திரட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அந்தச் சக்திக்கு மேலும் பலத்தைச் சேர்ப்பதற்காக, முஸ்லிம் மக்களின் கூட்டமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தின்போது, இனவாதத்தைத் துண்டும் வகையில் சிலர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இதனால், பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை காணப்பட்டதாகவும், பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில், வைத்து, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ள  மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .