Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 08 , பி.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற அதாவது, 2009.05.19ஆம் திகதியளவில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் 785 முகாம்கள் பேணிவரப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பேணிவரப்பட்ட முகாம்கள் தொடர்பில் ஜயந்த சமரவீர எம்.பி.யினால், பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கான பதிலை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, சபைக்கு ஆற்றுப்படுத்தினார்.
அவரது பதிலின் பிரகாரம், 2014.12.31ஆம் திகதியளவில், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 529 இராணுவ முகாம்கள், 25 கடற்படை முகாம்கள், 07 விமானப்படை முகாம்கள் என 561 முப்படை முகாம்கள் இருந்தன. உயர் பாதுகாப்பு வலயங்களுடன் கூடியதாக முகாம்கள் பேணிவரப்பட்டவில்லை.
2015.10.30ஆம் திகதியளவில் 555 முப்படை முகாம்கள் பேணிவரப்பட்டன என்றும் அப்பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
27 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
47 minute ago