2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வெட்டுக் காயங்களுடன் மூதாட்டியின் சடலம் மீட்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெட்டு காயங்களுடன் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (22) முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு  மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரே வெட்டு காயங்களுடன் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தப் பெண்மணி  வீட்டில் சடலமாக கிடப்பதனை அவதானித்த கிராமத்தவர்களால் மாங்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிஸார் கிளிநொச்சி தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X