Freelancer / 2026 ஜனவரி 03 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
2026 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்துக்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை ஒரே நிறுவனத்தின் கீழ் மேற்பார்வை செய்யுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தமக்கென ஒரு இடம், அழகான வாழ்க்கை தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் குறித்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடந்த ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முடிக்கப்படாத வீட்டுத் திட்டங்களை விரைவாக முடிப்பது குறித்தும், இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. (a)

1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago