2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்தது: நால்வர் தப்பினர்

Editorial   / 2025 ஒக்டோபர் 16 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலிஎல, மெடம்பிடிகம, அங்குருமலை, உனகொல்ல வட்டா பகுதியில் பெய்த மழை காரணமாக, வீட்டின் மீது புதன்கிழமை(15)இரவு மண் மேடு,  சரிந்து விழுந்ததில், வீட்டினுள் இருந்த நான்கு பேர் மயிரிழையில் உயிர் தப்பியதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல, உனகொல்ல வட்டாவை சேர்ந்த கோஹிலன் பியதர்ஷனி என்பவருக்கு சொந்தமான வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மண் மேடு இடிந்து விழுந்த நேரத்தில் உள்ளே இருந்த நான்கு பேர் வேறு அறைகளில் இருந்ததால், அவர்கள் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.   

குடியிருப்பாளர்கள் தற்போது பக்கத்து வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இருந்த வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது, மேலும் வீட்டில் இரண்டு அறைகள் மண் மேட்டின் கீழ் மூழ்கியுள்ளன என்று பொலிஸார் ர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, காலி மாவட்டத்தில் நெலுவ, கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல, கண்டி மாவட்டத்தில் உடுநுவர, கேகாலை மாவட்டத்தில் யடியந்தோட்டை, குருநாகல் மாவட்டத்தில் ரம்புக்கனை, குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, மாத்தளை மாவட்டத்தில் பல்லேகம, அலவ்வ மாவட்டத்தில் அம்பகன்கோரல மற்றும் மொனராகலை மாவட்டத்தில் மெதகம ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை   வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .