2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் அறிவிப்பு

S.Renuka   / 2025 டிசெம்பர் 03 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10ஆவது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் காலம் 2025.12.15 வரை நீட்டிக்கப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், 2022, 2023 அல்லது 2024ஆம் ஆண்டுகளில் முதல் அல்லது இரண்டாம் தவணையாக கல்விப் பொதுத் தர (உயர்தர) பரீட்சை எழுதிய மாணவர்களிடமிருந்தும், 2025ஆம் ஆண்டில் மீண்டும் உயர்தரத் பரீட்சை  எழுதிய மாணவர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும், நிலவும் பாதகமான வானிலையைக் கருத்தில் கொண்டும், இந்தக் கடன் திட்டத்திற்கான விண்ணப்பக் காலம் 2025.12.15 வரை நீட்டிக்கப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை www.studentloans.mohe.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2025.11.01 முதல்  2025.11.30 வரை திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X