2025 நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை

வினாத்தாள் கசிந்ததா? CIDயில் புகார்

Editorial   / 2025 நவம்பர் 25 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பொருளியல் விஞ்ஞான வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) புகார் அளிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள்தில், செவ்வாய்க்கிழமை (25) அன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மேற்படி விவகாரம் தொடர்பில் பதிலளித்த அவர், வினாத்தாள் கசிந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவு ( CID) அது குறித்து விசாரிக்கும் என்றார்

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X