2025 நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை

விபசாரியை வீட்டுக்கு அழைத்து உல்லாசம்: சுவரில் சாய்ந்து தூங்கிய முதியவர்

Editorial   / 2025 நவம்பர் 23 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தேவரா அருகே கோந்துருத்து பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ்(வயது 61). இவர் வௌ்ளிக்கிழமை (21) அதிகாலையில் தனது வீட்டின் வெளியே சுவரில் சாய்ந்தபடி தூங்கி கொண்டு இருந்தார். அருகில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அங்கு வந்த துப்புரவு பணியாளர்கள் அந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் ஒரு பெண் பிணம் இருந்தது.

இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே எர்ணாகுளம் தெற்கு பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான பொலிஸார், அந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஜார்ஜை தூக்கத்தில் இருந்து எழுப்பி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் பொலிஸ்  நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர் அந்த பெண்ணை கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் அவர்  அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கு திருமணமாகி மனைவி, மகள், மகன் உள்ளனர். மகன், லண்டனில் வசித்து வருகிறார். மகள், பாலாவில் வசித்து வருகிறார். மகளை பார்க்க கடந்த 20-ந் திகதி எனது மனைவியும், நானும் சென்றிருந்தோம். அங்கு மனைவியை விட்டுவிட்டு நான் மட்டும் வீடு திரும்பினேன். அப்போது வரும் வழியில் விபசாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணை சந்தித்தேன். அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க விரும்பி வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்தோம்.

மேலும் நான் மது குடித்து இருந்தேன். பின்னர் பணம் கொடுப்பது தொடர்பாக எனக்கும், அந்த பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் இரும்பு கம்பியால் அந்த பெண்ணை அடித்தேன். இதில் அவர் இறந்துவிட்டார். அவரது உடலை அப்புறப்படுத்த அக்கம்பக்கத்தினரிடம் நாய் செத்துவிட்டதாகவும், அதன் உடலை வெளியே கொண்டு சென்று வீச சாக்கு மூட்டை தருமாறும் கேட்டேன்.

கிடைக்காததால் கடையில் வாங்கி வந்து அந்த பெண்ணின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வெளியே தூக்கி கொண்டு சென்று வீச முயன்றேன். ஆனால் முடியாததால் அங்கேயே போட்டு விட்டு குடிபோதையில் படுத்து தூங்கி விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர். மேலும் அந்த பெண் யார்? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X