2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Freelancer   / 2025 ஒக்டோபர் 01 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 8 மாவட்டங்களில் இன்றைய தினம் (01) வெப்பமான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதனால், வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் இலேசான ஆடைகளை அணியுமாறும், நிழலான பகுதிகளில் ஓய்வெடுத்தல் மற்றும் போதியளவு நீரை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X