2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

வர்த்தகரிடம் இலஞ்சம் பெற்ற விவகாரம்: மறுக்கும் எதிர்க்கட்சிகள்

Freelancer   / 2025 ஜனவரி 10 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாக கூறிய கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 50 கோடி ரூபா பணம் பெற்றதாக வெளியான செய்தியை மறுப்பதாக, எதிர்க்கட்சியின் பலம் வாய்ந்த இரண்டு அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன.  

தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை வழங்குவதற்காக கோடீஸ்வர வர்த்தகரிடம் இருந்து இந்தத் தொகை பெறப்பட்டதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

எம்.பி பதவி வழங்கப்படாத கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கட்சி அலுவலகத்திற்கு வந்து ரவுடித்தனமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தொழிலதிபர் தான் கொடுத்த 50 கோடி ரூபாயை திருப்பித் தருமாறு கோரியுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சமகி ஜன பலவேகவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார கூறியதாவது,

 தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாகக் கூறி தமது கட்சிக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் வினவிய போது, தமது கட்சியும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக, அதன் ஆளும் செயலாளர் ரேணுகா பெரேரா தெரிவித்தார். AN







 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X