2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வர்த்தக நோக்கில் வெளிநாட்டவருக்கு இலங்கை வதிவிட விசா

Freelancer   / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் இலங்கை தமது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது. 
 
குறித்த விசேட விசா ஜெர்மன் நாட்டவரான ப்ரே ட்ரெக்ஸ்செல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தியோகபூர்வமாக இந்த விசாவை கையளித்துள்ளார். 
 
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையில் நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும். 
 
இதற்கமைய, 5 வருட வதிவிட விசாவை பெறுவதற்கு 1 லட்சம் அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயத்தை முதலீடு செய்ய வேண்டும். 
 
அதேநேரம், 10 வருட வதிவிட விசாவை பெறுவதற்கு 2 லட்சம் அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயத்தை முதலீடு செய்ய வேண்டும்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X