J.A. George / 2021 மே 13 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் மூன்று நாள்களுக்கு தொடர்ச்சியாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று இரவு(13) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
“அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் இந்த நாட்களில் அனுமதி வழங்கப்படும். அத்துடன், மருந்துகளை கொள்வனவு செய்தல், வைத்தியசாலைக்கு செல்லுவோருக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும், மருந்தகங்கள் மருந்துகளை விநியோகிக்க அனுமதி வழங்கப்படும். அதனை தவிர வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை.
அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை இந்த மூன்று நாள்களில் நடைமுறைப்படுத்தப்படாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago