2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வரி குறையாது: வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும்

Gavitha   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்ததாலும் இறக்குமதி வரியை குறைக்கும் சாத்;தியம் இல்லை என்பதால், வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படும்' என்று இலங்கை வாகன இறங்குமதிகள் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர கூறினார்.

'வற்' வரி தொடர்பிலான கலந்துரையாடலொன்று வாகன உரிமையாளர் சங்கத்திலுள்ள மூன்று நிறுவன உரிமையாளர்களுக்கும் பிரதமர் மற்றம் நிதியமைச்சருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றது.

இதன்போது, வரியை குறைக்க முடியாது என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். இதனால் வாகனங்களின் விலைகள் 300,000 ரூபாயிலிருந்து 400,000 ரூபாய் வரைஅதிகரிக்கப்படும்.

முன்னர் வாகன இறக்குமதி மீதான வரிகள் குறைக்கப்பட்ட போது, வாகனங்கள் பல இறக்குமதி செய்யப்பட்டதால் வீதியில் வாகன நெருக்கடி ஏற்பட்டதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.

'புதிய வாகனங்களின் விலைகளை, உற்பத்தியாளர்கள் தாம் நினைத்தபடி அதிகரிப்பதனால் அதிக இறக்குமதி தீர்வை செலுத்த நேரிடுவதில்லை' என்று புது வாகன இறக்குமதியாளர் சங்க தலைவர் கிஹான் பிலப்பிட்டிய கூறினார்.

'வற் வரிக்கு முன்னரே இறக்குமதியாகும் வாகனங்கள் மீது விதிக்கக்கூடிய சகல தீர்வைகளும் விதிக்கப்பட்டு விட்டன' என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X