2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வெலிக்கடையில் மண்ணுக்குள் ரிவால்வர்

Editorial   / 2025 மே 06 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையின் எல் வார்டுக்குப் பின்னால் கழிவுநீர் ஓடும் வடிகால் அருகே மண்ணை அகற்றும் போது 0.38 (சிறப்பு) ரிவால்வர் கண்டுபிடிக்கப்பட்டது என வெலிக்கடை சிறைச்சாலையின்  சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

பொரளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், வெலிக்கடை சிறைச்சாலையிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரிவால்வர் பல ஆண்டுகளாக மண்ணுக்கு கீழ் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும், மேலதிக விசாரணைக்காக அது பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் காமினி பி. திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X