2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

வலது பக்கம் சென்ற இளைஞனுக்கு ரூ.15,000 அபராதம்

Editorial   / 2026 ஜனவரி 16 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஹஸ்பர்  

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகரை சேர்ந்த வயது (21) இளைஞனுக்கு போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கந்தளாய் நீதிமன்றம் ரூபா 15000.00 அபராதம் விதித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது 97ம் கட்டை சிராஜ், நகர் சந்தியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வலது பக்கத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு இடது பக்கமாக சென்று திரும்ப வேண்டும் என்ற நிலையில் வலது பக்கத்தில் சென்ற போது போக்குவரத்து பொலிஸாரினால் நீதிமன்றம் செல்வதற்கான அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த இளைஞன்  கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (14) ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த குற்றத்துக்காக ரூபாய் 15,000  தண்டப்பணம் விதிக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X