2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

”விளக்கை அணைத்து விளையாட வேண்டாம்”

Editorial   / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பழிவாங்கலை தமிழ் மக்கள் கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அமரி ஹோட்டலில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

, வெள்ளிக்கிழமை பார்த்து  இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று விளக்கை அணைத்து விளையாட வேண்டாம் என்றும் எனது அன்பு நண்பர் தோழர் அனுரவிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார். அரசியல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாம் ஒன்றுபட்டு கட்சி வேறுபாடுகள் இல்லாமல் செயல்பட வேண்டும். ஆரம்பத்தில் கூறப்பட்ட மத்திய வங்கி மோசடிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இது நிச்சயமாக 100% அரசியல் பழிவாங்கல் என்று மனோ கணேசன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X