2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வெள்ளை வேனில் கடத்தல் ; வெளியே குதித்து, தப்பிய சிறுவன்

Janu   / 2025 ஜூலை 17 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன் இரத்தினபுரி பகுதியில் வைத்து வேனில் இருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் புதன்கிழமை (16) அன்று இடம்பெற்றுள்ளது.

சிறுவனை கடத்தியதாக கூறப்படும் நபர்களை கைது செய்ய சிறப்பு விசாரணை ஆரம்பித்துள்ளதாக கஹதுடுவ பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிலியந்தலையில் உள்ள ஒரு தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன், வெள்ளிக்கிழமை (16) மாலை 4.00 மணியளவில் பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கஹத்துடுவ மயானத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வேனில் வந்த குழுவினரால்   சைக்கிளுடன் கடத்தப்பட்டதாக பொலிஸாரிடம் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X