Mayu / 2026 மே 03 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் விவாகரத்து வழக்கினால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியின் தென்னை மரங்களை கணவர் வெட்டிச் சாய்த்த விசித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தம்பதியினரிடையே நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், இதனால் கடும் கோபமடைந்த கணவன் 90களின் வில்லன் பாணியில் பழிவாங்கத் துணிந்துள்ளார்.
நள்ளிரவு வேளையில் திருட்டுத்தனமாக காணிக்குள் நுழைந்த அவர், மரம் வெட்டும் இயந்திரத்தைக் (Chain Saw) கொண்டு அங்கிருந்த பயன்தரும் தென்னை மரங்களைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளார்.
இதில் உச்சகட்ட அதிர்ச்சியாக, ஒரு தென்னை மரத்தை மட்டும் பாதிவரை வெட்டிவிட்டு அப்படியே விட்டுச் சென்றுள்ளார்.
அந்த மரம் எந்நேரமும் விழக்கூடும் என்பதால் மனைவியும் பிள்ளைகளும் பெரும் பீதியில் உள்ளனர். வீட்டுச் செலவுக்கு உதவியாக இருந்த மரங்களை அழித்தமை மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை குறித்து அந்தப் பெண் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கணவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago