Editorial / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
வவுனியா சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள விடாது தடுத்து வந்த தொல்பொருள் திணைக்களம் சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் பிரதேசம் என பெயர் பலகை இட்டிருந்ததோடு அங்கு உள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கி இருந்தது.
அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளையும் இடைநிறுத்தி இருந்ததோடு எவ்வித புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள விடாது தடை செய்திருந்தது.
எனினும் ஊர்வலங்கள் கடும் பிரயத்தனத்தின் மூலம் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சின் அனுமதியை பெற்று பிள்ளையார் ஆலயத்தில் கட்டுமான பணிகள் ஆரம்பித்தன.
இந் நிலையை சாதகமாக பயன்படுத்திய தொல்பொருள் திணைக்களம் அங்கிருந்த எண்கோண மண்டபத்தின் தாம் புனரமைத்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பதை அறிந்து ஐங்கோண மண்டபத்தில் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை குறித்த எண்கோண மண்டபம் இருந்த பகுதியில் இருந்து கடந்த காலத்தில் எண்கோண வடிவிலான சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டு அது எல்லப்ப மருதன்குளம் குளக்கட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டு தற்போது எல்லப்ப மருதங்குளம் பகுதியில் அது கோவில் கொண்டு எழுந்தருளி இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த மண்டபம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
குறித்த எண்கோண வடிவிலான சிவலிங்கம் கிளிநொச்சி, குறுந்தூர் மலை மற்றும் இந்தியாவின் கும்பகோணம் பகுதிகளில் ஆய்வுகளின் போது காணப்பட்டதாகவும் தொல் பொருளாளர்கள் தெரிவிப்பதோடு அதேபோன்றுதான் சிவலிங்கமே குறிப்பிட்ட சமணங்குளம் பகுதியில் காணப்பட்டதாகவும் அந்த எண்கோண வடிவிலான சிவலிங்கமே குறித்த எண் கோண மண்டபத்தில் வைத்து புராதன காலங்களில் வழிபட்டு இருக்கலாம் என்கிற வரலாறுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் குறித்த இடத்தில் விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





27 minute ago
29 minute ago
33 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
29 minute ago
33 minute ago
44 minute ago