2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வாக்களிப்பை தவிர்த்த எம்.பி யார் தெரியுமா?

Editorial   / 2025 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை  பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் முற்பகல் 11.30 மணி முதல் மாலை  4 மணிவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை  4.10 மணிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த    177 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவாக்களித்தனர். இதற்கு அமைய பெரும்பான்மையான வாக்குகளால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. அர்ச்சுனா இராமநாதன் எம்.பி  வாக்களிப்பிலிருந்து தவிர்ந்துகொண்டிருந்தார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் தீர்மானம் 115 உறுப்பினர்களின்கையொப்பத்துடன்   சபாநாயகர் ) ஜகத் விக்கிரமரத்ன விளிடம் கடந்த மார்ச் மாதம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விசாரணைக் குழுவை அமைப்பதற்கானதீர்மானம் 2025 ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X