2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வாரத்துக்கு ஒருமுறை எழுமாறாக பி.சி.ஆர், பரிசோதனை

J.A. George   / 2021 ஜனவரி 29 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாரத்துக்கு ஒருமுறை பாராளுமன்ற வளாகத்தில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், அப்பரிசோதனைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற அமர்வு இடம் பெறும் மற்றும் இடம்பெறாத காலங்களிலும் வாரத்திற்கு ஒரு முறை இந்த பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

2021 ஜனவரி 13 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையிலும் பாராளுமன்ற வளாகத்தில் 190 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X