2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வாவியில் சடலமாக மிதக்கும் மரைகள்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

கடந்த இரு வாரங்களுக்குள் 20 இற்கும் மேற்பட்ட மரைகள், அம்பேவெல வாவியில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

இதன் பின்புலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவும் தனது செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். 

ஹோட்டன் தென்ன தேசிய சரணாலய பகுதியில் மான், மரை உள்ளிட்ட வன விலங்குகள் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடப்படுகின்றன. இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட வேட்டை நாய்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. 

தனி நபர்கள் மற்றும் சில குழுவினர் இணைந்து வன விலங்குகளை வேட்டையாடி, அப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், அப்பகுதிகளுக்கு வருபவர்கள் மான், மரை உள்ளிட்டவற்றை உண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.  

கூட்டமாக வரும் மான்களை, வேட்டை நாய்கள் துரத்திச்சென்று கொல்கின்றன, நாய்களுக்கு அஞ்சி ஓடும்போது சில மான்கள் வாவிக்குள் விழுகின்றன. 

அதன்பின்னர் அவற்றை வேட்டைக்காரர்கள் கைப்பற்றுகின்றனர். இப்படியான முறையிலேயே வேட்டை இடம்பெற்று வந்துள்ளது. 

எனினும், கடந்த சில நாட்களாக வேட்டையர்கள் எவரும் வருவதில்லை எனவும், நாய்கள் அநாதரவாக விடப்பட்டுள்ளன எனவும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், நாய்கள் வேட்டையை விடவில்லை என்பதால் அவை மரைகளை துரத்திச் செல்கின்றன. 

இதனால் வாவிக்குள் விழுந்து உயிரிழந்த மரைகளே சடலமாக மிதப்பதாக அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .