2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

வாஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணைகள் டிசெம்பர் 17ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மாலபே தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த நிபுண ராமநாயக்க என்ற மாணவனைக் கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்டார்கள் என்று கூறப்படும், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கு, குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் தொலைபேசி அழைப்பு விவரங்களில் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், வழக்கு விசாரணைகள்  டிசெம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன, வாஸ் குணவர்தனவின் மனைவி சியாமலி குணவர்தன, பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .