Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசா காலத்தை தாண்டி வெளிநாட்டினர் தங்குவதை தடுப்பதற்காக புதிய திட்டத்தை ட்ரம்ப் அரசு விரைவில் அமுல்படுத்த உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ட்ரம்ப் அரசால், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்தல், நாடு கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் மீதும் கெடுபிடிகள் காட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்காலிக பயணமாக அமெரிக்கா செல்பவர்கள் 15,000 அமெரிக்க டொலர் வரை செலுத்தினால்தான் விசா வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை விரைவில் சோதனை முறையில் ட்ரம்ப் அரசு அமுல்படுத்தப்படவுள்ளது.
கடந்த 2023ஆம் நிதியாண்டுக்கான அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கையில், அந்த ஆண்டில் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா காலத்தை தாண்டி, அமெரிக்காவில் தங்கி இருந்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே, விசா காலத்தை கடந்து எந்த வெளிநாட்டினரும் தங்கக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .