2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’விசுவாசத்தின் ஹீரோக்கள்’

S.Renuka   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்களில் இறந்தவர்கள் அனைவரையும் 'விசுவாசத்தின் ஹீரோக்கள்'  'Heroes of Faith' என்று வத்திக்கான் திங்கட்கிழமை (21) அன்று முறையாக அறிவிப்பதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தகவல் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கூறியுள்ளார்.

இதனை  வத்திக்கான் சனிக்கிழமை (19) அன்று அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 கடந்த  6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த ஈஸ்டர் தாக்குதல்களில் பின்னணியில் செயல்பட்டவர்களையோ அல்லது தாக்குதல்களில் ஈடுபட்டவர்களையோ  கைது செய்வதற்கு  தொடர்பில் ஆட்சியிலிருந்த மூன்று அரசாங்கங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாக்குதல்களில் இறந்த 300க்கும் மேற்பட்டவர்களை 'விசுவாச நாயகர்கள்' என்று அறிவிக்க வத்திக்கான் இப்போது முடிவு செய்துள்ளது.

இந்த கொடிய தாக்குதல்கள் நடந்த முக்கிய இடங்களில் ஒன்றான கட்டுவாப்பிட்டியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடைபெறும் புனித விழாவில், கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அவர்களால் இந்தப் பிரகடனம் சத்தமாக வாசிக்கப்படும் என்றும் அருட்தந்தை. ஜூட் கிரிஷாந்த கூறியுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் இலங்கை முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .